Thursday, October 13, 2016

சொர்கம்

அவர் ஒரு பெரிய துறவி. இளம் வயதிலேயே ஐம்புலன்களை அடக்கி தவநெறி தவறாமல் ஞான ஜோதியாய் வாழ்ந்தார். ஊருக்கு வெளியே அவருடைய ஆஸ்ரமம் இருந்தது. ஏராளமான சீடர்கள் இருந்தார்கள்.

ஆஸ்ரமத்துக்கு அருகில் பன்றி ஒன்று, தன் குட்டிகளுடன் வசித்து வந்தது. அதைத் துரத்த துறவியின் சீடர்கள் எவ்வளவோ முயற்சித்தார்கள். அது அசைந்து கொடுக்கவில்லை.
"பரவாயில்லை, இருந்துவிட்டுப் போகட்டும். பன்றியும் இறைவன் படைப்புத்தானே! அது தன் வாழ்க்கையை வாழட்டும்! நாம் நம்
வாழ்க்கையை வாழ்வோம்,'' என்று சொல்லிவிட்டார் துறவி.
ஆனாலும், பன்றியோ அதன் குட்டிகளோ ஆஸ்ரமத்திற்குள் நுழைந்துவிட முடியாதபடி ஆஸ்ரமத்தின் வெளிப்புறக் கதவைப் பலப்படுத்தினார்கள்.
காலம் நகர்ந்தது. துறவி தினமும் காலையிலும் மாலையிலும் சீடர்கள் புடைசூழ சற்றுத் தொலைவில் இருந்த ஆற்றுக்குக் குளிக்கச் செல்வார். அப்படிப் போகும்போதும் வரும்போதும் அந்தப் பன்றியின் குடும்பத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்.
அசிங்கத்தில் விளையாடிக்கொண்டிருக்கும் பன்றிக் குட்டிகளைப் பார்த்துத் துறவியின் சீடர்கள் முகம் சுளிப்பார்கள்.
""இறைவன் ஏன்தான் இந்த ஈனப் பிறவியைப் படைத்தானோ குருதேவா! பார்க்கும்போதே வயிற்றைக் குமட்டுகிறதே! பாருங்கள்!
பன்றிக்குக் கொஞ்சமாவது சுத்த உணர்வு இருக்கிறதா என்று !'' என்றான் பிரதான சீடன்.
""தவறு செய்கிறாய் மகனே! மனிதனின் கண்களைக் கொண்டு பன்றியின் வாழ்க்கையைப் பார்க்கிறாய். அதனால்தான் உனக்கு அருவருப்பாக தெரிகிறது. பன்றிக்கு அதன் வாழ்க்கை சொர்க்கம்தான். ஒருவேளை அந்தப் பன்றிகள் நம்மைப் பார்த்து, ""இறைவன் ஏன்தான் இந்த ஈனமான மனிதப் பிறவியைப் படைத்தானோ?'' என்று பேசிக்கொண்டிருக்கிறதோ என்னவோ! யாருக்குத் தெரியும்?''
துறவியை பன்றிகளின் வாழ்க்கை அதிகமாக ஈர்த்தது. அவை தினமும் உணவு தேடும் அழகைப் பார்த்துக் கொண்டு இருந்தார். பன்றியின் குடும்பம் பெருகியது. அவ்வப்போது அந்தப் பன்றிகளுக்கு ஆஸ்ரமத்திலிருந்து உணவும் அளிக்கச் சொல்வார் துறவி.
காலம் ஓடியது. துறவி நோய்வாய்ப்பட்டடார். இன்னும் சில நாட்களில் தனக்கு மரணம் சம்பவிக்கப் போகிறது என்பதைத் தன் ஞான திருஷ்டியால் தெரிந்து கொண்டார். அவருக்கு இருந்த அபரிமிதமான யோக சக்தியால், தான் அடுத்த பிறவியில் ஒரு பன்றியாகப் பிறக்கப் போகிறோம் என்பதையும் தெரிந்து கொண்டார். அதுவும் ஆஸ்ரமத்திற்கு அருகில் வசித்து வந்த பன்றிக்கூட்டத்திலேயே பிறக்கப் போகிறோம் என்பதைத் தன் நுண்ணுணர்வால் உணர்ந்து கொண்டார்.
திடுக்கிட்டார்... இறைவனை வேண்டினார். "வாழ்நாள் முழுவதும் தவநெறி தவறாமல் வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?' என்று புலம்பினார்.
""நாளெல்லாம் நீ பன்றிகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்ததால் ஒரு பிறவி மட்டும் நீ பன்றியாகப் பிறந்து பன்றி வாழ்க்கை வாழ வேண்டும். அந்த வாழ்க்கையை உடனே முடித்துக் கொண்டால், அதன்பின் உனக்குப் பிறவி கிடையாது. நேராக என்னிடம் வந்து
விடலாம். ஆனால், பன்றி வாழ்க்கையில் திளைத்து உன் உண்மை நிலையை மறந்தால் உனக்கு விமோசனமே இல்லை.'' என்று
இறைவன் மனமொழியாகப் பேசியருளினார்.
தான் இறக்கப் போகும் நேரம் நெருங்கியவுடன் மற்ற சீடர்களை வெளியே அனுப்பிவிட்டுப் பிரதான சீடனிடம் ரகசியக் குரலில் பேசினார்.
""அப்பனே! இது தேவ ரகசியம். வேறு யாரிடமும் சொல்லிவிடாதே. நான் இன்று இரவு சாகப் போகிறேன். உடனே எதிரே வசிக்கும் ஒரு பெண் பன்றியின் கருவில் நுழைவேன். குறித்த காலத்தில் ஒரு பன்றிக் குட்டியாகப் பிறப்பேன். நீ பன்றிக் கூட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும். நமது சாஸ்திரங்களின்படி ஒரு பன்றியின் கர்ப்பகாலம் 120 நாட்கள். இன்றிலிருந்து 120 நாட்களில் பிறக்கப் போகும் குட்டியை அடுத்த இரண்டு மூன்று தினங்களில் கொன்றுவிடு. இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பன்றியின்
வாழ்க்கையை இரண்டு நாளாவது வாழ்ந்து பார்த்துவிடுகிறேன்.''

அன்று இரவே துறவி மாண்டார். பன்றியின் கருவினுள் புகுந்தார். துறவியின் பிரதான சீடன் கையில் கத்தியுடன் காத்திருந்தான். குறித்த
காலத்தில் பன்றி குட்டி போட்டது. தன் குருவின் மேல் உள்ள கருணையினால் அந்தப் பன்றிக்குட்டி ஒரு வாரம் நன்றாக வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று விட்டுவிட்டான் சீடன்.
பிறகு ஒரு நாள், அந்தக் குட்டியைக் கொல்லக் கத்தியை ஓங்கியபோது பன்றியாக இருந்தும் யோக சக்தி நிறைந்த அந்தத் துறவி அழாத
குறையாகக் கெஞ்சினார்.
""பெரிய பிழை செய்துவிட்டேன். நான் சொன்னது எல்லாம் தப்பு. இந்தப் பன்றி வாழ்க்கைதான் எவ்வளவு சுகமாக இருக்கிறது தெரியுமா? இதை முழுமையாக வாழ விரும்புகிறேன்.''
""ஆனால் குருவே! நீங்கள் உடனே உயிரை விட்டால்தானே இறைவன் திருவடியை அடைய முடியும்?''
""இறைவன் திருவடி யாருக்கு வேண்டும்? இந்தப் பன்றிக்குட்டியின் வாழ்க்கையைப் போல் இறைவன் திருவடி சுகமாக இருக்குமா என்ன? இது சொர்க்கமாக இனிக்கிறதடா! இனி நான் எடுக்கப் போகும் எல்லாப் பிறவிகளிலும் ஒரு பன்றியாகப் பிறக்கவே ஆசைப்படுகிறேன். என் கூற்றில் சந்தேகமிருந்தால் நீயும் வேண்டுமானால் ஒரு முறை பன்றியாகப் பிறந்துதான் பாரேன்.''
தப்பித்தோம் பிழைத்தோம் என்று சீடன் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டான். அந்தத் துறவி செய்த ஒரே தவறு. தான் பிறந்த
உடனேயே தன்னைக் கொன்றுபோட்டுவிட வேண்டும் என்று சொல்லியிருக்க வேண்டும். இரண்டு நாட்கள் பன்றியாக வாழ்ந்து பார்க்கிறேன் என்று சொன்னார். அதில் பற்று வந்துவிட்டது.
இந்தக் கதையில் ஒரு பெரிய வாழ்வியல் உண்மை ஒளிந்திருக்கிறது. இன்று பலரும் மது, புகை போன்ற தீய பழக்கங்களுக்கு எப்படி அடிமையாகிறார்கள் தெரியுமா? அதில் அப்படி என்னதான் இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்ற ஆர்வத்தில் ஆரம்பித்துத் பின்
அதைவிட்டு விலக முடியாத அளவிற்குத் தங்கள் வாழ்க்கையைச் சிக்கலாக்கிக் கொள்கிறார்கள்.
இன்றைய இளைஞர் கூட்டம் மது, புகைப்பிடித்தல், தவறான உறவு என்று அனைத்தையும் ஒரு முறையாவது சுவைத்துப் பார்க்க விரும்புகிறது. அது இரண்டு நாட்கள் பன்றியாக வாழும் கதைதான். பன்றியாக இல்லாத வரைக்கும் தான், பன்றியைக் கண்டால் அருவருப்பாக இருக்கும். பன்றியாகிவிட்டால் அதுவே சுவர்க்க லோகமாக தான் இருக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.
விளையாட்டிற்குக் குடித்தாலும் விஷம், தன் வேலையைக் காட்டிவிடும். விஷம் என்று தெரிந்தபின் விலகி இருப்பது நல்லது.

Sunday, October 9, 2016

பாட்டியும் கடலும்

😃😃😃😃😃😃😃😃😃😃

ஒரு கிராமத்துல ஒரு பாட்டி தன் பேரனோடு வசித்து வந்தார்.
ஒரு நாள் அந்த பாட்டி காலில் புண் ஏற்பட்டுவிட்டது.

நீண்ட நாள்களாகியும் காலில் இருந்த புண் ஆறவில்லை.
இதனால் பாட்டியுன் பேரன் மிகவும் வருத்தமடைந்தான்.

பேரனின் நண்பன் ஒருவன்.. பாட்டியின் காலில் ஏற்பட்டிருக்கும் புண் குணமடைய தினமும் கடல்நீரை எடுத்துவந்து காலில் ஊற்றினால் போதும் என்றான்.

அதை கேட்ட பேரனுக்கு மிகவும் மகிழ்ச்சி.
வீட்டிற்கு வந்தவனுக்கு திடிரென்று ஒரு சந்தேகம் உண்டாகியது.

கடல்நீரோ பொதுச்சொத்து. தனிமனிதன் சுயநலத்திற்காக பொதுச்சொத்தான கடல்நீரை பயன்படுத்தலாமா..?
என்ற குழப்பம் உண்டாகியது..

எதற்கும் விஏஓ விடம் அனுமதி பெற்றுவிடலாம் என்று..
விஏஓவிற்கு ஒரு  கடிதம் எழுதினான்.

மதிப்பிற்குரிய விஏஓ அவர்களே.. இதுமாதிரி  என் பாட்டிக்கு உடம்பு சரியில்ல.. கடல்தண்ணீர எடுத்து பயன்படுத்த உங்கள் அனுமதி வேண்டும்னு கேட்டு எழுதினான்.

கடிதத்தை படித்த விஏஓ அதிர்ச்சி அடைந்தார். இது எவன் செஞ்ச கூத்துனு தெரியலயே.. இதுவரைக்கும் எவனும் இது மாதிரி ஒரு அனுமதி கேட்டதில்லையே.. இப்படி ஒருத்நன் கேட்குறான்னாலே ஏதோ வில்லங்கம் இருக்குனு அர்த்தம்..

நமக்கெதுக்கு வம்பு பேசாம தாசில்தார்க்கு அனுப்பிடுவோம்னு..
பேரன் எழுதுன கடிதத்ததையும் சேர்த்து
அனுப்பினார்.

தாசில்தாசிரிடம் அந்த கடிதம் சென்றது.
தாசில்தார் பார்த்தார். அந்த விஏஓவுக்கும் நமக்கும் ரொம்ப நாளா வாய்க்கா தகராறு.. எப்படி நம்மள பழிவாங்கலாம்னு பார்த்துட்டு இருந்தான்.. அவன்தான் ஏதோ சூழ்ச்சி பண்றான்.. பேசாம இதை கலெக்டருக்கு அனுப்பிடுவோம்னு..
மாவட்ட ஆட்சியர் அவர்களே.. எங்க பகுதி  கிராமத்து பாட்டி காலுல புண்ணு.. அதற்கு கடல் தண்ணிய பயன்படுத்திக்க அனுமதிக்கிறிங்களானு..? கேட்டு அவர் ஒரு கடிதம் எழுதினார்.

கடிதம் கலெக்டர் கைக்கு கிடைத்தது.
கலெக்டர் யோசித்தார். அனுமதி கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா எதிர்க்கட்சி காரனானு தெரியலயே..

கேட்டவன் ஆளுங்கட்சிகாரனா இருந்து அனுமதி கொடுத்துட்டா எதிர்க்கட்சிக்காரன் போராட்டம் நடத்துவான்.

கேட்டவன் எதிர்க்கட்சிக்காரனா  இருந்து அனுமதி கொடுத்துட்டா ஆளுங்கட்சிகாரன் கோபத்துக்கு ஆளாகனும்..
நமக்கு எதுக்கு வம்புனு.. கலெக்டர் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைத்தார்.

அனுமதி கடிதம் அமைச்சர் கையில் கிடைத்தது. எந்த கிறுக்கன் இப்படி ஒரு பிரச்சினைய கெளப்புனதுனு தெரியலயே.. தெரியாத்தனமா அனுமதி கொடுத்துட்டு நாளைக்கு திரும்பி வந்தாங்கனா நம்ப அமைச்சர் பதவியே காலியாகிடுமேனு..

ஆத்து  தண்ணி, குளத்து தண்ணி , கிணத்து தண்ணிதான் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் வரும்.. நீங்கள் கேட்பதோ கடல் தண்ணி.. கடலோர பாதுகாப்பு மத்திய அரசு கட்டுப்பாட்டுல வரும்..
அதனால உங்கள் அனுமதி கடித்தத்தை நான் மத்திய அரசுக்கு அனுப்புறன்னு கலெக்டருக்கு அமைச்சர் பதில் எழுதினார்.

கடிதம் மத்திய நீர்வளத்துறையின் கையில் கிடைத்தது. அமைச்சர் பிரதமரிடம் பேசினார்.
அவரோ தான் பல வெளிநாடுகளுக்கும் பயணம் செய்திருப்பதாகவும்.. அந்த அனுபவத்தின் படி பார்த்தால்..
என்னதான் கடலின் ஒரு கரை நம்ம நாட்டில் இருந்தாலும் அடுத்தகரை அடுத்த நாட்டில் உள்ளது. எனவே கடல் தண்ணியை எடுத்து பயன்படுத்துவது என்பது சர்வதேசப்பிரச்சினை..
ஆகவே அதுகுறித்து ஐநாசபையில் பேசி அனுமதி வாங்கும் வரை கடல்தண்ணியை எடுத்து பாட்டி காலை கழுவுவதற்கு தடை விதிக்கப்படுகிறது என்று..
மத்திய அரசின் உத்தரவு மாநில அமைச்சருக்கு வந்து..
மாநில அமைச்சரிடம் இருந்து
மாவட்ட கலெக்டருக்கு வந்து..
மாவட்ட கலெக்டரிடமிருந்து
தாசில்தாருக்கு வந்து அவரிடமிருந்து
விஏஓக்கு வந்து..
விஏஒ விடமிருந்து பாட்டியோட பேரன் கைக்கு  கிடைத்த போது பாட்டி செத்து நாற்பது நாளாகி இருந்தது.

(இந்த கதை சிரிக்க மட்டுமல்ல.... :( 🙁 )

Friday, October 7, 2016

நாட்டுச் சூழல்

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..​

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

​ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..​

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

​இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.​

​ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது​

​ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது​

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

​"Fault makers are majority, even they protected in most situations"​

​இன்றைய நிலை....​

​"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...​

​தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"​

படித்ததில் பிடித்ததால் பகிர்கிறேன்...

Saturday, October 1, 2016

*'ஒரு மருத்துவரின்  புலம்பல்'*

கண்ட எண்ணைலயும் பொரிச்ச வடையையும், சமோசவையும் சாப்பிடறானுவ..!

சாக்கடைக்கு பக்கத்தில உள்ள குழாயிலிருந்து எடுத்த தண்ணில முக்கிக் கொடுக்கற பானிபூரியை சாப்பிடறானுவ..!

பூச்சிக்கொல்லி மருந்துகள் மூலமே வளர்க்கப்பட்ட காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடறானுவ..!

டாய்லட் நல்லா கிளீன் பண்ணும்னு நிரூபிக்கப்பட்ட கோக்கையும், பெப்ஸியையும் குடிக்கறானுவ..!

தண்ணியடிக்கறானுவ..!
சிகரட் குடிக்கறானுவ..!
குட்கா., பான்னு புகையிலையைப் போட்டு மெல்றானுவ..!

ரோட்டில புகைக்கு நடுவே ரெண்டு மணிநேரம் காத்தை சுவாசிச்சு வீட்டுக்கு வரானுவ..!

இவ்வளவும் பண்ணிட்டு, உடம்பு சரியில்லைனு இங்க வந்து, நான் ஒரு மருந்து எடுத்துக்கொடுத்தா.,

*”இந்த மருந்தாலே ஏதாவது SIDE EFFECT இருக்கா”*-ன்னு கேக்கிறானுவ.....!!!!!

😂😂😂😂😂😂😂😂😂

Wednesday, September 28, 2016

தாய்

நெஞ்சை தொட்ட ஓர்
உண்மை சம்பவம்..

ஒரு பெண்
தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண்
இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின்
இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின்
ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால
வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது.
தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
பள்ளியில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார்
செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன்
புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன
பரிட்சையில் முதல் தரத்தில்
தேறினான்
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த
தாய் ஆவலுடன்
பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின்
வகுப்பறை எது என
அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்
இறைவனை புகழ்ந்தாள் சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனுக்கு பிடித்தமான
உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வருகையை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்தாள் மகன்
வந்தவுடன் வாஞ்சையுடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள்
சென்று படுத்து விட்டான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன்
என் பள்ளிக்கு வந்தாய்?.
அங்கு அழகான பணக்காரர்கள்
மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்
நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய
அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என்
பள்ளிகூடம் பக்கமே வராதே" என கத்தினான்
கோபமாக. அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம்
கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும்
மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும்
நண்பர்கள் முன் வர வேண்டாம் என
தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க
சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன்
இருப்பது வெட்கம் என்றும், தான்
ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.
அவள் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து.
இறுதி பரீட்சையில் தேர்ச்சி பெற்று மருத்துவ
கல்லூரிக்கு மகன்
தேர்வானது அவளுக்கு தெரியவந்தது.
தலை நகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மீதமிருந்த
அனைத்து சொத்துக்களையும்
விற்று மகனுக்கு கொடுத்து அனுப்பினாள். 5
வருடம் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு டாக்டர்.
அவனை பார்க்க ஆசையாய் இருந்தால் பல முறை
முயற்ச்சி செய்தும் அவனனை பார்க்க முடியவில்லை அவன் அனுமதிக்கவும் இல்லை. ஒரு கடிதம் மகனிடம்
இருந்து வந்தது.

அதில், அம்மா நான்
இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த
டாக்டர்களில் ஒருவன். எனக்கும் ஒரு செல்வந்தரின் மகளுக்கும் திருமணம் நடக்க உள்ளது. அவளும் ஒரு டாக்டர். உன்னை போல் குருடியின்
மகன் டாக்டர் என தெரிந்தால்
என் திருமனமும்,கௌரவம் பாதிப்படையும். ஆதலால்
நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண் காணாத தேசம்
செல்கிறேன். இனி என்னை தேடாதே இது தான் அந்த கடிதத்தின்
வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும்,
வறுமையும்,
அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம்
எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் உணவுக்காக
வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த
வீட்டின் எஜமானி இளம்வயது பெண். நல்ல
இளகிய குணம் படைத்தவள்.
இரட்சிக்கபட்டவள். அவளும்
ஒரு டாக்டராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயாக
நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம்
நன்றாகவே நடந்தன. அந்த எஜமானியின்
கணவன் அமெரிக்காவில்
இருந்து திரும்பி வந்தான்.
தனது எஜமானியின் கணவர் வருகிறார்
என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த வேலைகாரியான குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சாப்பிட
அமர்ந்தான். உணவை இளம் மனைவி பரிமாற ஆசையாக சாப்பிட்டான். திடீரென அவன்
முகம் மாறியது. டக்கென்று திரும்பி
தன் மனைவியின்
முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ
சமைத்தாயா?" என்று.
மனைவி குழப்பத்துடன்
இல்லையே என்றாள். " அப்படியானால் யார்
சமைத்தது? என்றான். வீட்டு வேலைக்காரி சமைத்தாள்
என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன்
அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனான். இவள்
இன்னும் உயிரோடு இருக்கிறாளா என்று ஆத்திரமும்,
வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. அந்த தாய்க்கோ என்
மருமகளா என் எஜமானி என்றும் தன் மகனை கண்ட சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின்
இதயத்தை நிரப்பின. உணர்ச்சிகளால்
இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த
கணவன் சொன்னான் தன்
மனைவியை பார்த்து, "இந்த
குருடியை உடனடியாக
அனுப்பி விடு என்று கத்தினான் அவன் சத்தம். அடுப்படியில் நின்ற அந்த
அபலை தாயின் இதயத்தில்
முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
வேண்டுமா என எண்ணி அழுதாள்.
அந்த இளம் மனைவியோ அது தனது கணவனின் தாய் என்று தெரிந்ததும் இங்கேயே இருக்கட்டும் என்று எவ்வளவோ சொல்லியும்
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே
வேறு வழியின்றி அந்த தாய்க்கு போதுமான
பணம் கொடுத்து முன்பு அவள் வாழ்ந்து வந்த
ஊருக்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் வேதனையுடன்...
காலம் கடந்தது
இப்போது அந்த டாக்டரின்
தலை மயிர்கள் பழுக்க
ஆரம்பித்து விட்டன. உடல் பலம்
சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
சுயநலன், நன்றி மறத்தல் போன்ற
காரணங்களினால் கருத்து மோதல்
ஏற்பட்டு அவன் மனைவியும்
விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்
புரிந்து கொண்டாள்.

இப்போது டாக்டரிடம் பணத்தை தவிர
வேறு எதுவும் இருக்கவில்லை.
எதிர்காலங்கள் சூனியமான
நிலையில், ஆறுதலுற்கு கூட
யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.
மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்பு அவன்
உள்ளத்ததை வந்து தொட ஆரம்பித்தன.
ஒரு முறை ராத்திரியில்
எழுந்து அம்மா என கதறி அழும்
அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் புரிந்தது.
தாயை பார்க்கவேண்டும் என நினைத்தான். ஆனால் போக வில்லை.

ஒரு நாள் காலையில் அவன்
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர்
பேசினார். "உன் தாய் மரண தறுவாயில் இருக்கிறாள் நீ உடனே வா என்பதே அந்த
செய்தி. உடனடியாகவே அவன்
தனது காரில் கிளம்பி தன் தாய் இருக்கும்
இடத்திற்கு சென்றான்.
அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.
உயிர் போன நிலையில் அவளை கட்டிலில்
படுக்க வைத்திருந்தனர். இப்போது அம்மா
என கண்ணீர் விட்டு
கதறினான்... அழுதான்..
தன் தாயை நல்ல முறையில் அடக்கம்
செய்ய உதவினான். எல்லாம் முடிந்தது
அப்போது ஒரு கடிதத்தை அவனது உறவினர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன்
வருவானாக இருந்தால் மட்டும்
கொடுக்குமாறும், இல்லையெனில்
எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும்
அவர் சொன்னார். பிரித்து வாசித்தான்.
அவன் கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது.

அதில் இருந்த வரிகள் இதுதான்....

என் அன்பு மகனே , எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால்
மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடி தான்.
உன் தாய் குருடியாக இருந்திருக்க
கூடாது தான். எனக்கு உன் உள்ளம்
புரிகிறது.
உன் உணர்வுகளை நான்
பெரிதும் மதிக்கின்றேன். நான் ஒரு நாளும்
உன்னை சபித்ததோ, கோபப்பட்டதோ கிடையாது. உன் அப்பா இறந்தவுடன்
எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன் ஆனால் நான்
உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ
புரிந்து கொள்ளாமல் போய் விட்டாயே??
மகனே உனக்கு தெரியுமா நான் ஏன்
குருடியானேன் என்று
அப்போது உனக்கு சின்ன வயது.
சாலையில் ஓரத்தில நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு வித பொருள் உன் கண்ணில்
பட்டு உனக்கு ஒரு கண் குருடாகி விட்டது.
டாக்டர்கள் இன்னொரு வெண்படலம்
இருந்தால் மட்டுமே உனக்கு
பார்வையை கிடைக்க வைக்கலாம்
என்றனர். என்ன
செய்வதென்று தெரியவில்லை. நேரமும்
போதாது.
அதனால்....
எனது ஒரு கண்ணை உடனடியகாவே தானம்
செய்து உனக்கு பார்வை கிடைக்க
செய்தேன்.
எனது கண்தான் இன்று உன்
கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தையும்
ஏன் இந்த கடிதத்தையும் கூட அந்த கண்களாளேயே
பார்க்கிறாய்..

உனக்கு இதுவும் அவமானம் என்று
உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடாதே
அதை
அப்படியே விட்டு விடு. ஏனென்றால்
அந்த கண்களால் தான்
நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பேன் என் அன்பு மகனே
இப்படிக்கு,
என்றுமே அன்புள்ள,
உன் அம்மா....

இதை படித்த அந்த டாக்டர் மகன் உருன்டு புரண்டு அழுதானாம்..

இதை படித்த எனக்கு கண்கள் கலங்கின
உண்மை .
தயதுசெய்து பிறருக்கு பகிரவும்