Wednesday, September 28, 2016

தாய்

நெஞ்சை தொட்ட ஓர்
உண்மை சம்பவம்..

ஒரு பெண்
தனது ஒரேயொரு மகனுடன்
வாழ்ந்து வந்தாள். அவளுக்கு ஒரு கண்
இல்லை. அவள் கணவன் திடிரென ஒரு நாள் இறந்து விட்டார். கணவரின்
இறப்பிற்கு பின்பு அவளது வாழ்வின்
ஒவ்வொரு நொடியும் தன் மகனின் எதிர்கால
வாழ்வை குறித்த சிந்தனையாகவே இருந்தது.
தன்னிடம் இருந்த சொத்துக்களில்
ஒரு பகுதியை விற்று மகனை ஒரு நல்ல
பள்ளியில் சேர்த்தாள்.
மீதி சொத்தை தனது மகனின்
கல்வி தொடர்பான செலவுகளுக்கு தயார்
செய்திருந்தாள்.

நல்ல ஒழுக்கமிக்க மகன் இரக்கமானவன்
புத்திசாலி ஊரில் எல்லோரும் புகழும்
வண்ணம் அவன் செயற்பாடுகள் இருந்தன
பரிட்சையில் முதல் தரத்தில்
தேறினான்
இந்த செய்தியை அறிந்த உடனேயே அந்த
தாய் ஆவலுடன்
பாடசாலை நோக்கி ஓடினாள் மகனின்
வகுப்பறை எது என
அறிந்து அங்கு சென்று அவனை வாரி அணைத்து முத்தமிட்டாள்
இறைவனை புகழ்ந்தாள் சந்தோஷத்துடன்
வீடு வந்து அவனுக்கு பிடித்தமான
உணவை தயாரிக்க ஆரம்பித்தாள்.
மகனின் வருகையை எதிர்பார்த்து வழி மேல்
விழி வைத்து காத்திருந்தாள் மகன்
வந்தவுடன் வாஞ்சையுடன் அருகில்
சென்றாள். ஆனால் மகன்
முகத்தை திருப்பி கொண்டான். தாயுடன்
பேசவில்லை. நேராக அறைக்குள்
சென்று படுத்து விட்டான்.
அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
பதற்றத்துடன்
ஓடிச்சென்று என்னவென்றாள்
கவலையுடன். மகன் சொன்னான், " நீ ஏன்
என் பள்ளிக்கு வந்தாய்?.
அங்கு அழகான பணக்காரர்கள்
மட்டுமே வருவார்கள். நீயோ குருடி. என்
நண்பர்கள் என்னை குருடியின் மகன் என
கூப்பிடுகின்றனர். இது பெரிய
அவமானம். வெட்கம். இதன் பின்னர் நீ என்
பள்ளிகூடம் பக்கமே வராதே" என கத்தினான்
கோபமாக. அதிர்ந்து போனாள் தாய்.
ஆனாலும் மகனின் சந்தோஷம்
கருதி இனி அவ்வாறு நடக்காது என
சத்தியம் செய்தாள்.

இப்போது அவனது சுபாவம் மேலும்
மாறுபட ஆரம்பித்தது. தன்னை தேடி வரும்
நண்பர்கள் முன் வர வேண்டாம் என
தாயை எச்சரித்தான். அவள் கண்கலங்க
சரி என்றாள். பின்னர் சில நாட்கள் சென்ற
பின், தனக்கு குருடியுடன்
இருப்பது வெட்கம் என்றும், தான்
ஹாஸ்டலில் தங்கி படிப்பதாக சொன்னான்.
ஒரு நாள் வீட்டை விட்டே சென்று விட்டான்.
அவள் கதறி துடித்தாள், தினமும் தன்
மகனை நினைத்து.
இறுதி பரீட்சையில் தேர்ச்சி பெற்று மருத்துவ
கல்லூரிக்கு மகன்
தேர்வானது அவளுக்கு தெரியவந்தது.
தலை நகர் சென்று படிக்க வேண்டும்.
நிறைய செலவாகும். தனது மீதமிருந்த
அனைத்து சொத்துக்களையும்
விற்று மகனுக்கு கொடுத்து அனுப்பினாள். 5
வருடம் பறந்து சென்றன.
இப்போது அவளது மகன் ஒரு டாக்டர்.
அவனை பார்க்க ஆசையாய் இருந்தால் பல முறை
முயற்ச்சி செய்தும் அவனனை பார்க்க முடியவில்லை அவன் அனுமதிக்கவும் இல்லை. ஒரு கடிதம் மகனிடம்
இருந்து வந்தது.

அதில், அம்மா நான்
இப்போது இந்த நாட்டில் உள்ள சிறந்த
டாக்டர்களில் ஒருவன். எனக்கும் ஒரு செல்வந்தரின் மகளுக்கும் திருமணம் நடக்க உள்ளது. அவளும் ஒரு டாக்டர். உன்னை போல் குருடியின்
மகன் டாக்டர் என தெரிந்தால்
என் திருமனமும்,கௌரவம் பாதிப்படையும். ஆதலால்
நான் இந்த நாட்டை விட்டும் உன்
பார்வையை விட்டும் கண் காணாத தேசம்
செல்கிறேன். இனி என்னை தேடாதே இது தான் அந்த கடிதத்தின்
வரிகள். துடித்து போனாள் தாய்.
சில வருடங்கள் கடந்தன. முதுமையும்,
வறுமையும்,
அவளது ஒற்றை கண்ணுமே அவளிடம்
எஞ்சியிருந்த சொத்துக்கள். பசி காரணமாக
ஒரு பணக்கார வீட்டில் உணவுக்காக
வேலை செய்து வந்தாள் அந்த தாய். அந்த
வீட்டின் எஜமானி இளம்வயது பெண். நல்ல
இளகிய குணம் படைத்தவள்.
இரட்சிக்கபட்டவள். அவளும்
ஒரு டாக்டராகவே இருந்தாள். இந்த
தாயை தனது தாயாக
நேசித்து போஷித்து வந்தாள். எல்லாம்
நன்றாகவே நடந்தன. அந்த எஜமானியின்
கணவன் அமெரிக்காவில்
இருந்து திரும்பி வந்தான்.
தனது எஜமானியின் கணவர் வருகிறார்
என்பதனால் வாய்க்கு ருஷியாக நல்ல
உணவுகளை தயார்படுத்தி வைத்திருந்தாள்
அந்த வேலைகாரியான குருட்டு தாய்.
வீடு வந்த அவளது கணவன், சாப்பிட
அமர்ந்தான். உணவை இளம் மனைவி பரிமாற ஆசையாக சாப்பிட்டான். திடீரென அவன்
முகம் மாறியது. டக்கென்று திரும்பி
தன் மனைவியின்
முகத்தை பார்த்து கேட்டான், "இதனை நீ
சமைத்தாயா?" என்று.
மனைவி குழப்பத்துடன்
இல்லையே என்றாள். " அப்படியானால் யார்
சமைத்தது? என்றான். வீட்டு வேலைக்காரி சமைத்தாள்
என்றாள் மனைவி. உடன் எழுந்த அவன்
அடுப்படிக்கு சென்று எட்டி பார்த்தான்.
உள்ளே அவனது குருட்டு தாய்.
அதிர்ந்து போனான். இவள்
இன்னும் உயிரோடு இருக்கிறாளா என்று ஆத்திரமும்,
வெறுப்பும் அவன்
மூளையை ஆட்டுவித்தது. அந்த தாய்க்கோ என்
மருமகளா என் எஜமானி என்றும் தன் மகனை கண்ட சந்தோஷமும்,
மகிழ்ச்சியும் அந்த தாயின்
இதயத்தை நிரப்பின. உணர்ச்சிகளால்
இருவருமே பேசவில்லை.
மீண்டும் சாப்பாட்டு அறைக்கு வந்த
கணவன் சொன்னான் தன்
மனைவியை பார்த்து, "இந்த
குருடியை உடனடியாக
அனுப்பி விடு என்று கத்தினான் அவன் சத்தம். அடுப்படியில் நின்ற அந்த
அபலை தாயின் இதயத்தில்
முட்டி மோதி நின்றது.
துவண்டு போனாள்.
வாழ்க்கையை இதற்கு பிறகும் வாழ
வேண்டுமா என எண்ணி அழுதாள்.
அந்த இளம் மனைவியோ அது தனது கணவனின் தாய் என்று தெரிந்ததும் இங்கேயே இருக்கட்டும் என்று எவ்வளவோ சொல்லியும்
தனது கணவனின் பிடிவாதமும், கோபமும்,
ஆவேசமும் எல்லை மீறி செல்லவே
வேறு வழியின்றி அந்த தாய்க்கு போதுமான
பணம் கொடுத்து முன்பு அவள் வாழ்ந்து வந்த
ஊருக்கே மீண்டும் அனுப்பி வைத்தாள் வேதனையுடன்...
காலம் கடந்தது
இப்போது அந்த டாக்டரின்
தலை மயிர்கள் பழுக்க
ஆரம்பித்து விட்டன. உடல் பலம்
சற்று சோர்ந்தும் போய்விட்டது. கணவனின்
சுயநலன், நன்றி மறத்தல் போன்ற
காரணங்களினால் கருத்து மோதல்
ஏற்பட்டு அவன் மனைவியும்
விவாகரத்து செய்து விட்டு இன்னாரு மறுமணம்
புரிந்து கொண்டாள்.

இப்போது டாக்டரிடம் பணத்தை தவிர
வேறு எதுவும் இருக்கவில்லை.
எதிர்காலங்கள் சூனியமான
நிலையில், ஆறுதலுற்கு கூட
யாரும் இன்றி தனி மரமாக நின்றான்.
மெல்ல மெல்ல தான் தன் தாயிற்கு செய்த
துரோகங்கள், அநியாயங்கள்,
நோகடிப்பு அவன்
உள்ளத்ததை வந்து தொட ஆரம்பித்தன.
ஒரு முறை ராத்திரியில்
எழுந்து அம்மா என கதறி அழும்
அளவிற்கு அவனிற்கு தனது பாவங்களின் புரிந்தது.
தாயை பார்க்கவேண்டும் என நினைத்தான். ஆனால் போக வில்லை.

ஒரு நாள் காலையில் அவன்
தொலைபேசிக்கு ஒரு செய்தி வந்தது.
அவனது தூரத்து உறவினர் ஒருவர்
பேசினார். "உன் தாய் மரண தறுவாயில் இருக்கிறாள் நீ உடனே வா என்பதே அந்த
செய்தி. உடனடியாகவே அவன்
தனது காரில் கிளம்பி தன் தாய் இருக்கும்
இடத்திற்கு சென்றான்.
அவன் சென்ற போது,
அவளது உயிர் பிரிந்து விட்டது.
உயிர் போன நிலையில் அவளை கட்டிலில்
படுக்க வைத்திருந்தனர். இப்போது அம்மா
என கண்ணீர் விட்டு
கதறினான்... அழுதான்..
தன் தாயை நல்ல முறையில் அடக்கம்
செய்ய உதவினான். எல்லாம் முடிந்தது
அப்போது ஒரு கடிதத்தை அவனது உறவினர்
கொடுத்தார். தான் மறைந்த பின்னர், மகன்
வருவானாக இருந்தால் மட்டும்
கொடுக்குமாறும், இல்லையெனில்
எரித்து விடுமாறும் தயார்
கடைசி தருவாயில் வேண்டிக் கொண்டதாகவும்
அவர் சொன்னார். பிரித்து வாசித்தான்.
அவன் கண்களில் இருந்த கண்ணீர் வழிந்தது.

அதில் இருந்த வரிகள் இதுதான்....

என் அன்பு மகனே , எனக்கு தெரியும், என்
உருவத்தை பார்ப்பது உனக்கு ஒரு போதும்
பிடிக்காது என்று. அதனாலேயே,
எனது மரணத்திற்கு பின்னர் நீ வந்தால்
மட்டும் இதனை கொடுக்கும்படி சொன்னேன்.
மற்றபடி எனது அன்பு என்றும் மாறாதது.
அது இறைவனிற்கு மட்டுமே தெரிந்த
விஷயம். மகனே நான் குருடி தான்.
உன் தாய் குருடியாக இருந்திருக்க
கூடாது தான். எனக்கு உன் உள்ளம்
புரிகிறது.
உன் உணர்வுகளை நான்
பெரிதும் மதிக்கின்றேன். நான் ஒரு நாளும்
உன்னை சபித்ததோ, கோபப்பட்டதோ கிடையாது. உன் அப்பா இறந்தவுடன்
எனக்கு ஒரு வாழ்க்கை வேண்டும்
என்றிருந்தால் நான் இன்னொரு திருமணம்
முடித்து நன்றாக வாழ்ந்திருப்பேன் ஆனால் நான்
உனக்காகவே நான் வாழ்ந்தேன். அதை நீ
புரிந்து கொள்ளாமல் போய் விட்டாயே??
மகனே உனக்கு தெரியுமா நான் ஏன்
குருடியானேன் என்று
அப்போது உனக்கு சின்ன வயது.
சாலையில் ஓரத்தில நீ விளையாடிக்கொண்டிருந்தாய். ஏதோ ஒரு வித பொருள் உன் கண்ணில்
பட்டு உனக்கு ஒரு கண் குருடாகி விட்டது.
டாக்டர்கள் இன்னொரு வெண்படலம்
இருந்தால் மட்டுமே உனக்கு
பார்வையை கிடைக்க வைக்கலாம்
என்றனர். என்ன
செய்வதென்று தெரியவில்லை. நேரமும்
போதாது.
அதனால்....
எனது ஒரு கண்ணை உடனடியகாவே தானம்
செய்து உனக்கு பார்வை கிடைக்க
செய்தேன்.
எனது கண்தான் இன்று உன்
கண்களாக இருக்கிறது. நீ இந்த உலகத்தையும்
ஏன் இந்த கடிதத்தையும் கூட அந்த கண்களாளேயே
பார்க்கிறாய்..

உனக்கு இதுவும் அவமானம் என்று
உனது வலது கண்ணை பிடுங்கி எறிந்து விடாதே
அதை
அப்படியே விட்டு விடு. ஏனென்றால்
அந்த கண்களால் தான்
நான் உன்னை பார்த்துக் கொண்டிருப்பேன் என் அன்பு மகனே
இப்படிக்கு,
என்றுமே அன்புள்ள,
உன் அம்மா....

இதை படித்த அந்த டாக்டர் மகன் உருன்டு புரண்டு அழுதானாம்..

இதை படித்த எனக்கு கண்கள் கலங்கின
உண்மை .
தயதுசெய்து பிறருக்கு பகிரவும்

Tuesday, September 27, 2016

பயம் ஒரு பயணம்

திகில் கதை... பயமுள்ளவர்கள் படிக்க வேண்டாம்

அது ஒரு மலைப் பிரதேசம்.  கும்மிருட்டு . கடுமையான மழை.
சூசை பஸ் ஸ்டாப்பில் சிக்கிக்கொண்டிருந்தார். யாருமே சாலையில் நடமாடவில்லை. பஸ் ஒன்றும் வருவதாகத் தெரியவில்லை.

ஏதாவது கார் வந்தால் லிஃப்ட் கேட்டு போய்விடலாம் என்று எண்ணிக்கொண்டிருந்த வேளையில், ஒரு கார் மெதுவாக ஊர்ந்து வந்தது ;பஸ் ஸ்டாப் அருகில் நின்றது.

சூசைக்கு யோசிக்க நேரம் இல்லை. கார் கதவைத் திறந்துகொண்டு உள்ளே புகுந்து உட்கார்ந்தார். கார் மீண்டும் மெதுவாக நகர ஆரம்பித்தது.

அப்பொழுதுதான் சூசை கவனித்தார். டிரைவர் சீட்டில் யாருமே இல்லை. ஆனால் கார் நகர்ந்துகொண்டே இருக்கிறது. சூசைக்கு பயம் தலையிலிருந்து கால்வரை ஊசி போட்டது.

சாலையில் 90 டிகிரி திருப்பம். எதிரே கிடுகிடு பள்ளம். நாம் நிச்சயம் காரோடு சமாதி...செத்தோம்...  எண்ணிக்கொண்டிருந்த வேளையில், காரின் ஜன்னலுக்கு வெளியிலிருந்து ஒரு கை உள்ளே நீண்டு ,ஸ்டீரிங்க் வீலை திருப்பியது.

பயத்தின் உச்சத்துக்கு சென்ற சூசைக்கு, கார் கதவைத் திறந்து வெளியே குதித்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு ஹோட்டல் தெரிந்தது.  ஓட்டமாக ஓடி அங்கே சென்றார்.

“ஒரு கார் டிரைவர் இல்லாமல் வந்துகொண்டிருக்கிறது. நிச்சயமாக ஒரு பிசாசு வேலைதான். ரொம்ப பயமா இருக்கு”
என்று ஹிஸ்டீரியா வந்தது போல கத்தினார்.

ஹோட்டலில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து போய் வெளியே எட்டிப்பார்த்தனர். அந்த கார் மெதுவாக வந்து ஹோட்டலுக்கு முன்னால் நின்றது.

அதன் பின் பக்கத்திலிருந்து வெளிப்பட்ட இரண்டு மனிதர்கள் கருப்பு ரெயின் கோட்டோடு உள்ளே நுழைந்தனர்.
.
.
.
.
.
.
.
.
.
அவர்களில் ஒருவன் சூசையை சுட்டிக்காட்டி, “இந்த ஆளுதான். ரிப்பேரான காரை நாம மழையில தள்ளிகிட்டு வரும்போது உள்ளே ஏறி உக்காந்தவன்” என்றான்.

திருமணமும் ஆயுள் தண்டனையும்

திருமணமானவர்கள் ­ கீழே உள்ள செய்தியைப் படிக்கவேண்டாம்:

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்!.

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர்ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

மனம் பதைபதைத்து அவர் அருகில் சென்று, இதமாகக் கையைப் பிடித்து, “என்ன ஆயிற்று? இந்த நடு இரவில் இங்கே வந்து தனியாக அமர்ந்திருக்கிறீர்களே?” என்று கேட்டார்.

கணவன்: உனக்கு நினைவிருக்கிறதா?

20 வருடங்களுக்கு முன்னால் உனக்கு 18 வயதாகும் போது நாம் இருவரும் தனியாக பார்க்கில் சந்தித்தோமே?

மனைவி: ஆமாம், நினைவிருக்கிறது.

கணவன் (தொண்டை அடைக்கக் கமறலுடன்): அன்று உன் அப்பாவிடம் இருவரும் மாட்டிக்கொண்டோமே?

மனைவி: ஆமாம் (கணவரின் கண்களைத் துடைத்து விடுகிறார்)

கணவன்: என் நெற்றிப்பொட்டில் துப்பாக்கியை வைத்து “மரியாதையாக என் பெண்ணைத் திருமணம் செய்து கொள்கிறாயா?

இல்லை, 20 ஆண்டுகள் உன்னை ஜெயிலுக்கு அனுப்பவா?” என்று உன் அப்பா என்னைக் கேட்டது உனக்கு நினைவிருக்கிறதா?

மனைவி: அதுவும் நினைவில் இருக்கிறது. அதற்கென்ன?

கணவன் கண்களைத் துடைத்தவாறு: அன்று என்னை ஜெயிலுக்கு அனுப்பியிருந்தால் இன்று எனக்கு விடுதலை நாள்!!!

# இதுக்கு அப்புறம ் விழுந்த அடி, கேக்கவா வேணும்...

Start music 😂😂💃�🎼🎹🎷🎺 

Monday, September 26, 2016

கடி கடி கடி ஒரே கடி ..


1.பெரிய துணிக்கடை அதிபரா இருந்தாலும், அவருக்குப் பிறக்கிற குழந்தை என்னமோ அம்மணமா தான் இருக்கும்.
2. அதிக மார்க் வாங்கி மாநிலத்திலேயே முதல் மாணவனா வந்தாலும், ஆம்லெட் சாப்பிடணும்னு ஆசைப்பட்டால் முட்டை வாங்கித்தான் ஆகணும்....
3. என்னதான் இட்லி மல்லிகைப்பூ மாதிரி இருந்தாலும் அதை தலையில் வச்சிக்க முடியாது...
4. ஒரு பெண் எவ்வளவு சிவப்பாக இருந்தாலும், அவங்க நிழல் கருப்பாகத்தான் இருக்கும்.
5. பொங்கலுக்கு மட்டும் தான் அரசு விடுமுறை. ஆனால் இட்லி தோசைக்கு எல்லாம் விடுமுறை விடுவதில்லையே ஏன்....?
6. என்னதான் நீ மாடா உழைச்சாலும் உனக்கு கொம்பு முளைக்காது.
7. குச்சி மிட்டாய்ல குச்சி இருக்கும். பல்லி மிட்டாய்ல பல்லி இருக்காதுப்பா....
8. என்னதான் அரசியல்வாதிங்க கட்சி தாவினாலும்.... அவங்களுக்கு வால் முளைக்காது....
9. பிளேன் என்னதான் உயர உயர பறந்தாலும்.... பெட்ரோல் போட கீழே வந்துதான் ஆகணும்.....
10. என்னதான் ஒருத்தருக்குத் தலைகனம் இருந்தாலும்.... அது எத்தனை கிலோனு எடைபோட்டு பார்க்க முடியாது....
11. கோழிக்கு கோடி கணக்குல தீனி வாங்கி போட்டாலும் அது முட்டைதான் போடும்... நூத்துக்கு நூறு எல்லாம் போடாது...
12. வாழ்க்கைக்கும் வழுக்கைக்கும் ஒரு வித்தியாசம்.... ஒன்னுமே இல்லாத வாழ்க்கை போர் அடிக்கும்....
ஒன்னுமே இல்லாத வழுக்கை கிளார் அடிக்கும்.
13. என்னதான் நெருப்புக் கோழியா இருந்தாலும்.... அதனால் அவிச்ச முட்டை போட முடியாது.
14. ஒரு சிற்பி உளியால கல்லுல அடிச்சா அது கலை. உளியால நாம சிற்பியை அடிச்சா அது கொலை.
15. சும்மா இருக்கிறவன், சும்மா இல்லாம, சும்மா இருக்கிறவங்கள, சும்மா சும்மா கிண்டல் பண்ணா.... சும்மா இருக்கிறவங்க, சும்மா சும்மா கிண்டல் பண்றவன, சும்மா விடமாட்டாங்கன்னு சும்மா சொல்றேன்.....

Thursday, September 22, 2016

லஞ்சம்

ஒரு கிராமத்தில் குடி  தண்ணீருக்காக  ஒரு கிணறு வெட்ட அந்த ஊர் மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கிராம அதிகாரியும்  செய்யலாம் என்றும் அவர்கள் கோரிக்கையை கிடப்பில் போட்டுவிட்டார்.மக்களும் அதை மறந்து போய்விட்டனர்.ஒரு சமயம் அந்த கிராம அதிகாரிக்கு கொஞ்சம் பணம் தேவைப்பட்டது,அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.கிராம மக்கள் கோரிக்கையான கிணறு நியாபகம் வந்தது.உடனே அந்த கிராமத்தில் கிணறு வெட்டியதாகவும் அதற்கு  இரண்டு லெட்சம் ரூபாய் ஆனதாகவும் ஆவணங்கள் சரிசெய்து.அந்த இரண்டு லெட்சம் ரூபாயை அவர் சொந்த தேவைக்காக எடுத்துக் கொண்டார்.கொஞ்சம் காலம் கழித்து அவருக்கு பணி மாறுதல் அறிவிக்கப்பட்டிருந்தது.அவர் இடத்தில் பணிசெய்ய புதிய கிராம அலுவலரும் வந்தார்.முதலாமவர்,தன் பொறுப்புகளை புதியவரிடம் ஒப்படைக்கையில் தனியாக அழைத்து, கிணறு வெட்டாமலேயே தான் இரண்டு லெட்சம் எடுத்துக் கொண்டதை சொல்லி, தான் செய்த தவறு வெளிவராமல் பார்த்துக்கொள்ளுமாறும் வேண்டினார்.அப்பொழுது புதியவர் அவரை ஆறுதல் படுத்தி, நான் கவனித்துக் கொள்கிறேன்.நீங்கள் தைரியமாகப் போங்கள் என அவரை வழியனுப்பி வைத்தார்.ஓரிரு வருடங்கள் சென்ற பின் இந்த இரு அதிகாரிகளும் ஓரிடத்தில் சந்திக்க நேர்ந்தது, அப்பொழுது பழைய அதிகாரி, புதியவரிடம் கேட்டார், சார் நமது கிணறு சமாசாரம் என்னவாயிற்று? பிரச்சனை ஒன்றும் இல்லையே என்றார்.அதற்கு புதியவர் சொன்னார்.அந்த பிரச்சனை முடிந்து விட்டது, அதை சுமூகமாக முடித்துவிட்டேன் என்றார்.முதலாமவருக்கு விளங்கவில்லை, ஆர்வம் தாங்காமல், எப்படி சார் என்றார் ? அதற்கு இரண்டாமவர் சொன்னார், நீங்கள் வெட்டிய கிணற்று தண்ணீர் விஷத்தன்மை கொண்டது என்று Lab அறிக்கை வைத்து.அதை மூடுவதற்கு 3 லட்சம் செலவு என்று சொல்லி,நான் 3 லட்சம் எடுத்தேன் என்றார். இது தான்  நம் நாட்டின் அரசியல் நிலை.வருபவர்கள் யாராவது நல்லது செய்ய மாட்டார்களா என்று மக்கள்  ஏங்கி நிற்க நமது அரசியல்வாதிகள்/அதிகாரிகள் ஒருவரை ஒருவர் மிஞ்சிவிடுவர்,பிறகு நாடு எப்படி முன்னேறும்? 😟

எனதருமை இளம் வாக்காளர்களே...! நமது நகராட்சியில் நடைபெறும் லஞ்சம் ஊழல் முறைகேடுகள் செய்யும் அதிகாரிகளுக்கு ஊழியர்களுக்கு துணை போகாத நல்ல மனிதர்களை வார்டு உறுப்பினர்களாக தேர்வு செய்யுங்கள்..

Sunday, September 18, 2016

படித்ததில் பிடித்தது

ஆசிரியர் : உன் பெயர் என்னப்பா?

மாணவன் : பசுவுக்கு உடம்பு சரியில்லை.

ஆசிரியர் : என்னப்பா சொல்றே? புரியலியே?

மாணவன் : என் பெயர் 'கௌ' 'சிக்' சார்!

ஆசிரியர் : நீங்க ஒண்ணும் தூய தமிழ்ல பேசி என்னைக் கொல்ல வேண்டாம். ஆங்கிலத்திலேயே சொல்லுங்க.

மாணவன் : சரி சார்!

ஆசிரியர் : உங்க அப்பா பேரு என்ன?

மாணவன் : எங்க அப்பா பேரு KING COW MILK சார்!

ஆசிரியர் : ஏண்டா மறுபடியும் என்னை கொழப்பறே? தமிழ்லயே சொல்லித் தொலடா!

மாணவன் : எங்க அப்பா பேரு 'ராஜ' 'கோ' 'பால்' சார்.

ஆசிரியர் : ஆள விடுடா சாமி! இனிமே சத்தியமா உங்கிட்ட எதுவுமே கேட்க மாட்டேன்.

படித்ததில் பிடித்தது...

ஒரு கார்ப்பரேட் நீதி கதை

*ஒரு கார்ப்பரேட் நீதி கதை: அனைத்து துறைகளுக்கும் பொருந்தும்.*

ஒரு ஊரில் வியாபாரி ஒருவன் வாழ்ந்து வந்தான். தனது ஊரிலிருந்து தினமும் சரக்கு மூட்டைகளை கொண்டு சென்று பக்கத்து ஊர் சந்தையில் விற்பது அவனது தொழில். இதற்காக மாட்டுவண்டி ஒன்றை அவன் வைத்து இருந்தான்.

ஒரு நாள் அவன் வண்டியில் பூட்டும் மாடு அவனிடம் வந்து "எஜமான்! இரண்டு ஆண்டுகளாக நான் உங்களிடம் வேலை செய்கிறேன். ஆனால் நான் செய்யும் வேலைக்கு நீங்கள் எனக்கு சாப்பிட கொடுக்கும் புல்லின் அளவோ மிக குறைவு. தயவு செய்து எனக்கு நீங்கள் கொடுக்கும் புல்லின் அளவை அதிகரியுங்கள்" என்றது. மாடு சொன்னதை கவனமாக கேட்ட வியாபாரி "மாடே! நீ கடினமாக உழைப்பது உண்மையே. ஆனால் பக்கத்துக்கு வீட்டுக்காரன் மாடு 25 மூட்டைகளை தன் வண்டியில் சுமக்கிறது. ஆனால் நீயோ தினமும் 20 மூட்டைகளை மட்டுமே சுமக்கிறாய். நீ அதிக மூட்டைகளை சுமந்தால் உனக்கு புல்லின் அளவைஅதிகரிப்பதை பற்றி யோசிக்கிறேன்" என்றான். பக்கத்து வீட்டு மாடு பஞ்சு மூட்டைகளை மட்டுமே சுமக்கிறது என்பதை அறியாமல் இந்த மாடும் அதிக மூட்டைகளை சுமக்க ஒப்பு கொண்டது.

இப்படியே ஓராண்டு சென்றது. மாடு மீண்டும் சென்று வியாபாரியிடம் புல்லின் அளவை அதிகரிக்க கேட்டது. அதற்கு வியாபாரி "மாடே! அதிக பாரம் ஏற்றியதால் நம்முடைய பழைய வண்டி பாதிப்பு அடைந்து விட்டது. எனவே நான் இப்போது புது வண்டி செய்ய சொல்லியுள்ளேன். அதற்கு ஆகும் செலவை வேறு நான் பார்க்க வேண்டும். இன்னும் சற்று நாள் பொறுத்துக் கொள். நான் புல்லின் அளவை நிச்சயம் அதிகரிக்கிறேன்" என்றான். வேறு வழியின்றி மாடும் ஒத்து கொண்டது.

புது வண்டி வந்த ஆறு மாதங்களுக்கு பின் மாடு மீண்டும் வியாபாரியிடம் சென்று வழக்கமான கோரிக்கையை வைத்தது. இப்போது வியாபாரி, "மாடே! இப்போதெல்லாம் உன்னுடைய வேகம் மிக குறைந்து விட்டது. பக்கத்துக்கு ஊருக்கு செல்ல முன்பை விட அதிக நேரம் எடுத்து கொள்கிறாய். இதனால் நான் வியாபாரம் செய்ய கூடிய நேரம் குறைந்து விட்டது. எனவே உனக்கு அதிக புல் தருவது இப்போதைக்கு சாத்தியமில்லை" என்றான். கோபமடைந்த மாடு "எஜமான்! இந்த புது வண்டியின் பாரம் பழைய வண்டியை விட மிக அதிகம். இந்த கனத்தையும் சேர்த்து இழுக்க வேண்டியதாலேயே என்னால் முன்பு போல விரைவாக செல்ல முடியவில்லை" என்றது. அதற்கு வியாபாரி "மாடே! நீ என்ன காரணம் சொன்னாலும் உன்னால் எனக்கு அதிக லாபத்தை பெற்று தர முடியவில்லை. நான் உன் மேல் ஏற்றும் மூட்டைகளின் எண்ணிக்கையை வேண்டுமானால் குறைத்து விடுகிறேன். ஆனால் நீ அதிக புல் கேட்காதே" என்றான். தன் இத்தனை ஆண்டு உழைப்பும் வீணாகி விடும் என்று பயந்த மாடு "வேண்டாம் எஜமான். நான் எப்படியாவது வேகமாக சென்று உங்களுக்கு அதிக லாபம் பெற்று தந்து விடுகிறேன்" என்று கூறியது.

மறுநாள் முதல் மாடு தன் சக்தியெல்லாம் திரட்டி வேகமாக ஓட ஆரம்பித்தது. மீண்டும் முன்பு எடுத்து கொண்ட அதே நேரத்திலேயே பக்கத்துக்கு ஊருக்கு சென்று வியாபாரியை சேர்க்க தொடங்கியது. ஆனால் மிக கடின உழைப்பால் ஒரே மாதத்திலேயே நோயுற்று படுத்த படுக்கையானது. வழக்கமாக சாப்பிடும் புல்லை கூட அதனால் சாப்பிட முடியவில்லை. சில நாட்கள் அதற்கு நோய் குணமாக மருந்து கொடுத்த வியாபாரி ஒரு நாள் அதனிடம் "மாடே! உன்னை நல்ல விலைக்கு ஒருவர் கேட்கிறார். அவரிடம் உன்னை விற்று விட போகிறேன்" என்றான். "எஜமான்! நான் இப்போது இருக்கும் நிலைமையில் என்னால் எந்த வேலையும் செய்ய முடியாது. என்னை ஏன் அவர்கள் விலைக்கு கேட்கிறார்கள்?" என்றது. வியாபாரி அதற்கு "அவர்கள் உன்னை வேலை செய்ய சொல்ல வாங்கவில்லை. உன்னை கொன்று உன் தோலை எடுக்கவே உன்னை விலைக்கு கேட்கிறார்கள்" என்றான்.

வியாபாரி சொன்ன பதிலை கேட்டதும் மாட்டிற்கு கண்களில் நீர் வர தொடங்கியது. "எஜமான்! நீங்கள் செய்வது அநியாயம். உங்கள் பேச்சை நம்பி மாடாய் உழைத்தாலேயே நான் நோயுற்றேன். இல்லாவிடில் நான் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்திருப்பேன். நீங்கள் செய்தது துரோகம்" என்றது. அதை கேட்ட வியாபாரி, "நான் செய்தது துரோகம் இல்லை. ஒரு எஜமானனின் லட்சியம் தன் தொழிலாளியிடம் முடிந்த அளவு அதிக வேலை வாங்கி லாபம் பெறுவது. நான் அதையே செய்தேன். உன்னால் ஐந்து ஆண்டுகளில் சம்பாதிக்க வேண்டிய பணத்தையும் மூன்றே ஆண்டுகளில் சம்பாதித்து விட்டேன். இப்போது உன்னை விற்பதன் மூலமும் பணம் சம்பாதிக்க போகிறேன். என்னுடைய அதிக லாபம் பெரும் நோக்கம் நிறைவேற உன்னுடைய ஆசையை மூலதனமாக்கி கொண்டேன். நீ முதல் முறையிலேயே சுதாரித்து கொண்டிருந்தால் தப்பித்து விட்டு இருக்கலாம்" என்றான். மாடு தன் முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டது.

நீதி: நிர்வாகத்தின் நோக்கம் ஊழியர்களிடம் இருந்து எவ்வளவு வேலை வாங்க முடியுமோ அவ்வளவு வேலை வாங்குவது. இதற்காக அவர்கள் பொய்யான வாக்குறுதிகளையும் தரலாம். ஊழியர்கள்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.