😇😇
*கல்வி அதிகாரியாக பொறுப்பேற்றவுடன் ஒரு பள்ளிக்கு ஆய்வுசெய்யச் சென்றார் முருகேசு.*
*கரும்பலகையில் “Electricity” என்று எழுதப்பட்டிருந்தது.*
*ஒரு மாணவனை அழைத்து, “இதைப் படி” என்றார். அவன் உடனே தயங்காமல், “எலட்ரிகுட்டி” என்று படித்தான்.*
*முருகேசு, “தம்பி, அது எலட்ரிக்குட்டி இல்லேப்பா. எலட்ரிசிட்டி. எங்கே சொல்லு, “எலக்ரிசிட்டி”…*
*பையன் : எலட்ரிகுட்டி.*
*அடுத்த பையனைப்பார்த்து படிக்கச்சொன்னார். அவனும்*
*"எலக்ரிகுட்டி" என்றே படித்தான்.*
*அடுத்தவன், அடுத்தவன்.... வகுப்பு முழுவதும் ஒரேமாதிரி "எலக்ரிகுட்டி" என்றே படித்தது.*
*கடுப்பான முருகேசு, ஆசிரியரைப் பார்த்து,*
*“என்னையா இது. இப்படித்தான் பாடம் நடத்துரீங்களா? எலக்ரிசிட்டிய "எலட்ரிகுட்டி"ன்னு உச்சரிக்கிறாங்க . நீங்க பார்த்து திருத்துவது இல்லையா?” என்று பொரிந்தார்.*
*அதற்கு ஆசிரியர், “அவனுங்க “கெப்பாகுட்டியே” அவ்வளவுதான் சார்” என்றார்…*
*சப்தம் கேட்டு, அங்கே தலைமை ஆசிரியர் வந்தார். தலைமை ஆசிரியர் சொன்னார்,*
*“சார் மன்னிச்சுடுங்க. தயவு செய்து இங்கே நடந்ததை வெளியில சொல்லி “பப்ளிகுட்டி” பண்ணிடாதீங்க. பள்ளிக்கூடத்தோட பேரு கெட்டுப்போயிடும் பாருங்க...*
😧😧😲