Thursday, December 29, 2016

எமனும் அவன் ஆசையும்

எமதர்ம ராஜன் ஒருமுறை பூமிக்கு வந்தபோது அழகான ஒரு பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தான். அவள் மானுடப் பெண் என்றாலும் அவளை மணந்து சில காலமாவது வாழ வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்து விட்டது.

அந்த மானுடப் பெண்ணை மணந்து அழகான ஆண் பிள்ளைக்கு தகப்பனார் ஆனார் எமதர்மன். அவர் மணந்த பெண் நல்லவள் தான். என்றாலும் நாளாக நாளாக எமனுக்கு அவள் மீது சலிப்பு தட்டியது.

மேல் உலகம் போய் தப்பி விடலாமா என்று நினைக்க ஆரம்பித்தார். ஆனால் பிள்ளை மேல் இருந்த பாசத்தால் மகனை நிர்க்கதியாக விட்டுப் போக மனமும் வரவில்லை. தத்தளித்தார்.

மகன் கொஞ்சம் வளா்ந்ததும் மனம் விட்டு அவனிடமே பேசினார். அவனுடைய அம்மாவிடம தனக்குள்ள பயத்தையும் விளக்கினார்.

மகனே..நீ சிறந்த வைத்தியனாக வேண்டும்.  மரணத் தருவாயில் இருப்பவரைக் கூட நீ காப்பாற்ற முடியம்.

எப்படித் தொரியுமா? ஒருவர் மரணம் அடைவதாக இருந்தால் நான் அங்கு இருப்பேன். உனக்கு மட்டும் கண்ணுக்குத் தெரிவேன். நான் அங்கு இருந்தால் அவருக்கு வைத்தியம் செய்யாதே. நீ வைத்தியம் செய்து அவா் இறந்து போனால் உன் புகழ் குறையும். எனவே யாருக்கு வைத்தியம் செய்தாலும் நான் அங்கு இல்லையென்றால் தைரியமாக மருந்து கொடு. அவன் பிழைத்து எழுந்து கொள்வான். அதனால் உன் புகழ் மேலும் மேலும் பரவும் என்றார் எமன்.

மனைவியிடம் சொல்லிக் கொள்ளாமல் மகனை அணைத்து கண்ணீர் விட்டு எமதர்மன் நழுவி விட்டார்.

மகன் மருத்துவம் படித்து மகத்துவம் பெற்றான். அவன் வைத்தியம் செய்தால் எப்படியிருப்பவனும் பிழைத்துக் கொண்டான். ஒருவா் கூடச் சாகவில்லை. எல்லோரும் ஆச்சா்யப்பட்டார்கள். யாருக்காவது வைத்தியம் செய்யப் போகும் போது எதிரில் அப்பாவை(எமனை)ப் பார்த்தால் கும்பிட்டுவிட்டு வெளியே வந்து விடுவான். இந்த வைத்தியன் கைவிட்டால் பிறகு மரணம் தான் என்று ஊரே புகழ்ந்தது.

கொஞ்ச நாளில் அந்த ஊர் அரசரின் மகள் நோய் வாய்ப்பட்டாள். யார் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. இவனை அழைத்தார்கள். என் மகளைக் காப்பாற்றினால் அவளையே உனக்கு மனைவியாகத் தருகிறேன், ராஜ்ஜியத்தையும் தருகிறேன் என்றார் ராஜா. அவள் படுத்திருக்கும் அறைக்குள் போன வைத்தியனுக்கு அதிர்ச்சி.

எமன் (அப்பா)நின்று கொண்டிருந்தார். வைத்தியம் செய்தால் பிழைக்க மாட்டாள். ஆனால் பிழைத்துவிட்டால் அழகான அந்த ராஜகுமாரி, ராஜ்ஜியம் எல்லாம் கிடைக்கும்.இடைஞ்சலாக அப்பா குறுக்கே நிற்கிறார். எப்படி அவரை விரட்டுவது?

பளிச்சென்று யோசனை பிறந்தது. வாசல் பக்கம் பார்த்து கத்தினான். அம்மா..அப்பா உள்ளே இருக்கார். ரொம்ப நாளா அப்பாவைக் காணோம் காணோம்னு தேடினேயே..இங்க இருக்கார்..என்று அலறினான்.

அவ்வளவுதான் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று எமன் ஓட்டமாக ஓடிவிட்டான்.

*பொண்டாட்டிடா*!

Thursday, December 22, 2016

சுட்டது யார்?

😀😀😀😀😀😀😀😀

அதிகாலை வேலை காவல் நிலைய தொலைபேசி மணி அழைக்க, காவலர் கந்தன் தொலைபேசியை எடுத்துக் பேசினார்.

காவலர் : ஹலோ V 7 காவல் நிலையம், சொல்லுங்க.

எதிர் முனை : சார் இங்க ஒருத்தரச் சுட்டுட்டார் சார்.

காவலர் : சுட்டது யாருன்னு தெரியுமா?

எதிர் முனை : தெரியும் சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : யோவ் சுட்டங்களா இல்லையா?

எதிர் முனை : சுட்டாங்க சார்.

காவலர் : யார் சுட்டது?

எதிர் முனை : சுடலை சார்.

காவலர் : உங்கள் பேர் என்ன?

எதிர் முனை : சாரதி சார்.

காவலர் : கோபத்துடன் எந்த எடத்துல இருக்கீங்க

கொலை நடந்த இடத்தைக் கேட்டு தெரிந்து கொண்டு அங்கே சென்றனர் காவல் துறையினர்.

அந்த இடத்தில இருவர் மூவர் நின்று கொண்டிருந்தனர். ஒருவரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஸ்ட்ரெச்சரில் எடுத்துச் சென்று கொண்டிருந்தனர்.

காவலர் : இங்க கொலையா பார்த்த சாரதி யாரு?

அங்கே இருந்த இருவர் கையை தூக்கி நான் தான் என்று கூறினார்.

ஒருவரைப் பார்த்து

காவலர் : சொல்லுங்க என்ன பார்த்தீங்க?

பார்த்த சாரதி : நான் ஒன்னும் பார்க்கல சார் நான் இப்பத்தான் வந்தேன்.

காவலர் : யோவ் பிறகு எதுக்கு யா கையைத்தூக்குன.

பார்த்த சாரதி : என் பேர் பார்த்த சாரதி அதான் கையத் தூக்கினேன்.

இன்னொருவரைப் பார்த்து

காவலர் : அப்பா நீ யாருயா?

சாரதி (போனில் பேசியவர்):  நான் தான் பார்த்த சாரதி.

கடுங்கோபத்தில்

காவலர் : யோவ் உன் பேரு பார்த்த சாரதி யா?

சாரதி : இல்ல சார்.

காவலர் : நீ தான் யா சொன்ன பார்த்த சாரதினு.

சாரதி : ஆமா சார்.

காவலர் : அப்ப ஏன் இல்லனு சொன்ன?

சாரதி : என் பெரு பார்த்த சாரதி இல்லேனு சொன்னேன் சார் .

காவலர் : அப்ப உன் பேரு என்ன?

சாரதி : சாரதி சார்.

காவலர் : சுட்டதை பார்த்தது நீங்கள் தானா?

சாரதி : ஆமாம் சார்.

பார்த்த சாரதியப் பார்த்து

காவலர்  : அப்ப நீங்க

பார்த்த சாரதி : கொலையைப் பார்க்காத பார்த்தசாரதி சார்.

சாரதியைப் பார்த்து

காவலர் : போன் செய்தது நீ தானா?

சாரதி : ஆமாம் சார்.

காவலர் : சுட்டது யார்?

சாரதி : "மூன்றாம் நபரைக்  காட்டி" இவர் தான் சார்.

மூன்றாம் நபரைப்  பார்த்து

காவலர் : நீ யாரு?

3ம் நபர் : நான் சுடலை சார்.

சாரதியைப் பார்த்து

காவலர் : யோவ் அவரு சுடலைனு சொல்லுறாரு.

சாரதி :  ஆமாம் சார் அவர் சுடலை.

காவலர் : அப்ப சுட்டது யாரு?

சுடலையைக் காண்பித்து

சாரதி : இவர் தான் சார்.

காவலர் இப்பொழுது கீழ்ப்பாக்கத்தில் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டு இருக்கிறார்.

ரசிக்கத் தக்கது.   ரசித்தேன்.

😀😀😀😀😀😀😀😀